Monday, 2 May 2011

தல போல வருமா!!!!!!!




தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, ஒற்றுமையின்மை மற்றும் கோஷ்டிப் பூசல் என எனது எண்ணத்துக்கு மாறுபட்டு ரசிகர் மன்றத்தினர் நடந்து கொள்வதால், எனது பிறந்த நாளான மே 1-ம் தேதி முதல் ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன், இது எனது முடிவான அறிவிப்பு, என நடிகர் அஜீத் அதிரடியாக அறிவித்தார்.

(நமது உளவுதுறை அறிக்கைபடி இருக்கும் 50பேருக்கும் படியளந்து மாளவில்லை என்பதால் இந்த முடிவு என்று தெரிகிறது.)

"எனது நீண்ட திரைப் பயணத்துக்கு உதவிய ரசிகர்கள், பொதுமக்கள், ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த பொதுமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

(ரொம்ப நீஈஈஈஈஈஈஈஈண்ட பயணம்தான்.50படம்கிறதே சாதனைதான்).

என் படங்களை விமர்சிக்கும் உரிமை ரசிகர்களுக்கும் உண்டு.

(விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது தல உங்கள் நடிப்பு(?))


கோஷ்டிப் பூசல், ஒற்றுமையின்மை, தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, தன்னிச்சையாக இயங்குவது, சொந்த அரசியல் லாபங்களுக்காக நற்பணி இயக்கத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் நடப்பது போன்றவை என் எண்ண ஓட்டத்துக்கு உகந்தவை அல்ல.

(என்ன செய்றது தல காங்கிரஸ் மாதிரி நாங்களும் இருக்கோம்னு தெரியனும்ல.)



நலத்திட்டங்கள் செய்ய இயக்கம் எதுவும் தேவையில்லை. நல்ல உள்ளமும் எண்ணமும் இருந்தாலே போதும்.

(ஆமாம் தல நீங்க நடிக்கிறேன்னு படுத்தறதை நிறுத்தப்போறீங்களா.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பா நன்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்றி.)

..

..

1 comment:

  1. பதிவு இப்போது தெளிவ இருக்கு , எழுத்துக்கள் தெளிவ இருக்கு . . . சொன்ன குறையை உடனே அடுத்த பதிவுலையே சரி செய்து இருக்குறீர்கள் .
    வாழ்த்துக்கள் . . .

    ReplyDelete