Sunday, 22 May 2011

உங்களைப்போய் வஞ்சித்தார்களே கலைஞரே!!

உங்களைப்போய் வஞ்சித்தார்களே கலைஞரே!!

கனிமொழியின் கைதைத்தொடர்ந்து தமிழீனத்தலைவர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.அய்யகோ தமிழ் நாட்டுக்கு வந்த பெரும் துயர்தான் எத்தகையது?!1

"என் மீதும் என் குடும்பத்தினர்மீதும் வஞ்சம் தீர்க்கும்படலம் நடந்துமுடிந்துள்ளது."

தங்களின் உத்தமகுணம் யாருக்கும் தெரியவில்லை கலைஞரே!கழகமே குடும்பம் என்றிருந்தோரை புறம்தள்ளி குடும்பமே கழகம் என்ற உன்னத நிலைக்கு  
கொண்டுவரஎத்தனை இடர்களை சந்தித்தீர்?ராஜபாட்டையில் இடரும் முட்களை வாள் கொண்டு வெட்டாமல் புத்தி கொண்டு மழுங்கடித்த அரிய செயல்கள் யாருக்குத்தெரியும்?நாவலர்,எம்.ஜி.ஆர்,வைகோ என்று உங்களை வஞ்சித்தவர் எத்தனை பேர்!!!!

"நான் உயிரினும் மேலாகக்கருதும் கழகம் பெரும்தோல்விகண்டு ஆட்சியை இழந்திருக்கும் காலகட்டம் இது"

முட்டாள் ஜனங்கள் நீங்கள் உயிரென மதித்த குடும்பத்தின் அதிகாரமையங்களின் அலப்பறைகளே காரணம் என்கின்றனர்!!!!

"தமிழ் நாட்டுக்கென்று தனி ஜபர்தஸ்துகளை ஜன நாயகவிரோதசெயல்களை சாட்டைகளாகக்கொண்டு சர்வாதிகாரப்பாட்டை போட்டுக்கொண்ட தேர்தல் ஆணையம்என்னும் பிரம்மராக்ஷசம்"

மக்களுக்கு செய்த மகத்தான சேவைகளை சாதனைகளை விளக்க பணத்தாளில் அச்சடித்த விளக்கவுரையினைப் பட்டுவாடா செய்யவிடாமல் தடுத்த அக்கிரமத்தை என்னவென்று சொல்வது!!!!

"அப்பா சொன்னதைக்கேட்டதுதான் கனிமொழி செய்த குற்றம்"

தமிழகத்தை இரண்டாகப்பிரித்து தலைநகரில் கோலோச்ச ஒரு அண்ணனையும் தென்மண்டலத்தை ஆள ஒரு அண்ணனையும் அமர்த்தி டெல்லியில் அதிகாரம்செய்யவைக்க கவிதை சாலைகளில் திரிந்துக்கொண்டிருந்தவருக்கு பதவிபோதை ஊட்ட அப்பா சொல்தட்டாமல் தங்களின் சரியானஅரசியல்வாரிசாக வரித்துக்கொண்டது ஒரு குற்றமா!!!!

"சுயபுராணமாக இருந்தாலும் சுயமரியாதைபுதினமாகக்கொண்டு ஆயிரமாயிரம் இளைஞர்கள் இறுதிப்போரில் களம் காணவேண்டும்"

இதைவிட இளைஞர்களுக்கு வேறு என்ன வேலை தலைவரே?தாகம் தீர்க்க டாஸ்மாக்கும் இலவசமாக தொலைக்காட்சியும் கொடுத்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியஉங்களுக்காக இல்லையென்றாலும் தமிழர்மானம் காக்க சிறை சென்ற மறத்தமிழச்சிக்காக நிச்சயம் அவர்கள் தீக்குளிக்கவாவது செய்யவில்லையென்றால் என்னாவது!!!


"நாம் வாழும் இடத்தை வாழ்ந்த இடத்தை இருவண்ணகொடி பறந்த இடத்தை தர்ப்பைப்புல் முளைக்கும் இடமாக மாற்ற குமரிமுதல் இமயம்வரை தவமிருக்கின்றனர்"

அரசியல் என்பது சுடுகாட்டில் நடைபெறும் கூத்து என்று நீங்கள் அறியாததா தலைவரே!வேண்டுமானால் தா.கி,அருணா,ரமேஷ்,சாதிக்பாட்சா போன்றோரைக்கேளுங்களேன்.இல்லை ஈழத்தின் உயிர்களிடம் கேட்டுப்பாருங்களேன்.

உங்கள் அறப்போராட்டத்திற்கு என்றுமே  "பின்னாலிருந்து"ஆதரவு உண்டு தலைவரே!!!

..

..

5 comments:

 1. //தமிழீனத்தலைவர்//

  :-))))))))))))))))))))

  ReplyDelete
 2. ஆரியம் திராவிடம் பார்ப்பனர் சூத்திரர் என்று துவேஷங்களை தேவைப்படும்போது பயன்படுத்தி தன் கயமைத்தனங்களை மறைப்பது மு.கவிற்க்கு வாய் வந்த கலை

  ReplyDelete
 3. உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.  Share

  ReplyDelete