Sunday, 29 May 2011

யாராவது சொல்லுங்களேன்!

நான் தான் லச்சு பேசுகிறேன்.

எங்கன்னு  தேடாதீங்க.. அனுவோட குட்டிச்சேர்ல இருக்கேன் பாருங்க.

அங்க கம்ப்யூட்டர்ல மும்முரமா இருக்கிறது  அனுவோட அப்பா ரகு நந்தன்.
என்னமோ எழுதறாரே எட்டிப்பாக்கலாமா? என்ன அருமையா எழுதறாருப்பாருங்களேன்.
"குழந்தைகள் நமக்குள் பால்யத்தை விதைக்கும் விவசாயிகள்"

கையில் பிரஷ் வச்சிக்கிட்டு துணியில வித்தியாசமான ஓவியங்களாய்
தீட்டுறது  அம்மா கண்மணி.

தனிரூம்ல கிரிக்கெட்  பாத்துக்கிட்டு ஜாலியா இருக்கிறது தாத்தா ராகவன்.
பாக்குறது என்னமோ மறுஒளிபரப்புதான்.ஆனாலும் ரொம்ப ஆர்வத்தோட பார்ப்பார்.

இவரோட தர்மபத்தினி அம்சவேணி கோயிலே கதின்னு இருப்பாங்க.
ரொம்ப பக்தின்னு நினைச்சிடாதீங்க..எல்லாம் பக்கத்துவீட்டு கௌரியம்மாகூட ஊர்வம்பு பேசத்தான்.

எல்லாரைப்பத்தியும் சொல்லிட்டனா?அட அனுவைப்பத்தி சொல்லவேயில்லயே.

அனுதான் என் எஜமானி.பெரியஸ்கூல்ல 3வதுபடிக்கிறாள்.நல்லா படிப்பா.
எப்பவும் 3வதுரேங்குக்குள்ள எடுத்துடுவா.அவங்க ஸ்கூல்ல எல்லா பிரிவுக்கும்
சேர்த்துதான் ரேங்க் போடுவாங்க.ஆனா இப்பொழுதெல்லாம் அனு ரொம்ப குறும்பு பண்றாளாம்.
யாரையாவது பிடிச்சு அடிச்சுடறாளாம்.நேத்தைக்குக்கூட தாரணியோட நோட்ல கிறுக்கிவிட்டாளாம்.
பனிஷ்மெண்ட் குடுத்து சாரி கேட்க சொன்னாலும் கேக்கவேயில்லயாம்.


சரி அதை அப்புறம் பேசிக்கலாம்.

இப்போ அனு டான்ஸ் கிளாஸ் முடிச்சிட்டு காத்துக்கிட்டு இருந்தாள்.அதோ டிரைவர்மாமா  வந்துட்டார்.

அனு தன்னோட ஸ்கூல் பேகையும் லன்ச் பேகையும் தூக்கிக்கிட்டு வந்து வண்டியில் ஏறினாள்.

"டிரைவர் மாமா நான் இன்னைக்கு சிட்டுகுருவிய பாத்தேனே"

"அப்படியா கண்ணு"

இதுக்குமேல டிரைவர் மாமா பேசமாட்டார்.

வீடு வந்தாச்சு.

அம்மாவோ அப்பாவோ யாராவது வெளியில் நின்று சந்தோஷமா கட்டிபிடிச்சு
முத்தம் கொடுப்பாங்கன்னு வழக்கம்போல நினைச்சு ஏமாந்த அனு மெதுவா உள்ளே வந்தாள்.

"அனு, சீக்கிரம் ஹோம்வொர்க் முடிச்சிட்டு சாப்பிட்டு விட்டு தூங்கனும்மா.
நாளைக்கு காலையில் ஸ்விம்மிங் கிளாஸ் போகனும்",
அம்மா துணீயிலிருந்து கையும்கண்ணும் எடுக்காமயே விரட்டுனாங்க.

ராத்திரி மெதுவாக அப்பாவிடம் சென்றாள்.அப்பா இன்னும் கம்ப்யூட்டர்லதான் இருந்தார்.
"அப்பா நான் இன்னைக்கு ஒண்ணு பார்த்தேனே"

"நாளைக்கு பேசலாம் டார்லிங்க.குட் நைட்" ஒரு முத்தம் கொடுத்து  திரும்பவும் கம்ப்யூட்டர்ல மூழ்கிட்டார்.

அம்மா ஓவியத்திற்கு ஃபைனல்டச் கொடுத்துக்கொண்டிருந்தார்.
பக்கத்தில் போனால் பயங்கரமா திட்டு விழும்.

"தாத்தா ஒரு கதை சொல்லட்டுமா"

"என்னடா பௌலிங் போட்றீங்க.எல்லாம் விளம்பரத்துல நடிக்கத்தான் லாயக்கு"

"என்ன அனும்மா கேட்ட..எங்க காணோம்..அடச்சே மறுபடியும் ஒரு சிக்ஸ்"

வழக்கம்போல யாருமே அனு சொல்றத கேக்கவேயில்ல.

அனு அவளோட தனிரூமுக்குள் வந்தாள்.

அவ இன்னைக்கு ஸ்கூல்ல சிட்டுகுருவியைப்பார்த்தாளாம்.செல்ஃபோன் டவர்ல இருந்து
வருகிற கதிர்வீச்சு சிட்டுக்குருவிகளை அழிச்சிடுமாம்.
பெரியவளானாலும் செல்ஃபோன் யூஸ் பண்ணமாட்டாளாம்.
அப்புறம் கலர்ஃபுல் பட்டர்ஃப்ளை நிறைய பார்த்தாளாம்.கலர்ஃபுல்னா ஃபுல்லா கலர்ஸ் இருக்கும்ல
அந்த மாதிரின்னு எனக்கு சொன்னா தெரியுமா!!

அன்னைக்கு ஸ்கூல்ல நடந்த எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிட்டு தூங்கிவிட்டாள்.

இந்தமாதிரி நிறைய கதைகள் என் கிட்டே சொல்லியிருக்கா..நீங்க யாராவது அனுவோட
அப்பா அம்மாவிடம் இந்த கதையெல்லாம் சொல்லுங்களேன்.

..

..Thursday, 26 May 2011

ஓபன் செய்யாதீங்க ப்ளீஸ்!!!!


ஓபன் செய்யாதீங்க ப்ளீஸ்!!!!


என்னங்க இது சொல்ல சொல்ல ஓபன் செஞ்சுட்டீங்களே

                                      *
                                      *
                                      *
                                      *
                                      *
                                      *
                                      *
                                      *
                                      *
                                      *                                    
                                      *
                                      *
                                      *
                                      *
புஸ்கி:இன்னைக்கு பதிவு போடுவதற்கு எதுவும் தோணலை
அதனால ரொம்ப ஆவலா...சரி சரி துப்பாதீங்க
வேறுவழியே இல்லாம காத்துக்கிட்டு இருப்பீங்கன்னுதான்
எச்சரிக்கையா என் blogஅ ஓபன் செய்யாதீங்கன்னு
சொன்னேன்.
 ம்ம்ம்ஸ்டார்ட் மியூசிக்

..

..


Wednesday, 25 May 2011

படிக்காதீங்க!!!!!!!!!!!!!!!!!

இதனால் சகலமானவருக்கும் சொல்வது என்னவென்றால்
யாரும் இனிமே படிச்சு தேர்வுகள் எழுதி தானும் கஷ்டப்பட்டு
மத்தவங்களையும் கஷ்டப்படுத்த வேண்டிய்தில்லீங்கோ

அப்ப வேலவெட்டி பாத்து புவ்வாவுக்கு காசு சம்பாதிக்க
வேண்டாமான்னு எல்லோரும் கேக்குறது புரியுது..

இது என்னாங்க ஜுஜுப்பி மேட்டர்

கருணையே உருவான தாய், யாதுமாகி நின்ற தேவி
பாசமே தஞ்சமடைந்த பராசக்தி, அன்பின் உறைவிடம்
புரட்சித்தலைவலி அம்மா இருக்கும்போது என்ன கவலை?

நீங்க செய்யவேண்டியது எல்லாம் நீங்க எதிர்ப்பார்க்கிற
வேலைக்குத்தகுந்த மாதிரி கையோ காலோ கண்ணோ
மூக்கோ எது சவுரியமோ அதை புரட்சித்தலைவலியின்
பெயரைச்சொல்லி வெட்டிக்கனும் அம்புடுத்தேன்...

எவ்வளவோ செய்யறோம் வேலைக்காக இதுகூட
செய்யலைன்னா எப்படி??!!!!

என்னாது மூளையிருக்காவா? அதெல்லாம் அம்மாவுக்கு
ஓட்டுபோடும்போதே கழட்டிவக்கனும்கிறத மறந்துட்டீங்களா!!!
எத்தனை ச.ம .உக்கள் அமைச்சர் பெருமக்கள் அவங்கள நீங்க
அவமானப்படுத்தாதீங்க....ஆமா சொல்லிப்புட்டேன்...
செய்தி:அதிமுகவின் தேர்தல்வெற்றிக்காக நாக்கை வெட்டிக்கொண்ட
சரிதாவுக்கு அரசுப்பணி.

..

..

Tuesday, 24 May 2011

பொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!இன்றே கடைசி!!!ஐ.மு.கூ 3ம் ஆண்டுவிழாவில் ஒரு பரபரப்பான அறிக்கை வெளியிட்டது.

"கற்பழிக்கப்படும் பெண்களுக்கு 3லட்சம் நிதியும் வேலைவாய்ப்பும் அளிக்கப்படும்."

இந்த புரட்சிகரமான அறிவிப்பு பலரை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் சிலரின் கருத்துக்கள்..

அகில உலக டுபாக்கூர் நாட்டாமைகள் தலைவர்:
நாங்கள் பரம்பரையாகப்போற்றி வந்த நீதிமுறையை ஐ.மு.கூ மதிப்பதில் மிகவும் மகிழ்ச்சி.
இதைப்பாராட்டும்விதமாக என் தாத்தாவிற்க்கு தாத்தா கழுவப்பயன்படுத்திய சொம்பைப்பரிசாக
கொடுக்க இருக்கிறோம். விட்றா சம்முவம் வண்டிய"

மைனர்குஞ்சு:
"இது எனக்குமட்டுமில்ல என்னமாதிரி பல பேருக்கு உத்வேகம் குடுக்கிற அறிக்கை.எங்க மைனர்கள்
சங்கம் சார்பா ஐ.மு.கூவிற்கு பெரும்தொகையை நிவாரண நிதியாக அனுப்பி பாராட்டைத்தெரிவிக்கிறோம்.
மேலும் இலவசமாக காண்டம் வழங்க "ஏற்பாடு" செய்தால் இன்னும் மகிழ்ச்சி..

சவுண்டுமணி:
"இந்த அறிக்கை தயார் செய்தவன அப்டியே கல்வெட்டுல செதுக்கி தஞ்சாவூர் கோயில் வாசல்ல நட்டுவச்சு
பக்கத்துலயே உக்காந்துக்க சொல்லு..உலகமக்கள் தெரிஞ்சுக்கட்டும்."

இந்த புரட்சிகரமான அறிக்கையைத்தொடர்ந்து பரபரப்பான சலுகைகள் மக்களை குஷிப்படுத்தின..

"கற்பழிப்பு சான்றிதழ் சலுகைவிலையில் கொடுக்கப்படும்"டாகுட்டர்பிரகாஷ்.(authorised agent)

"3 நிமிடத்தில் கற்பழிப்பது எப்படி"சரோஜாப்பதிப்பகத்தின் பரபரப்பான விற்பனையில்.ஐக்கிய முடிச்சவிக்கிகள் கூட்டணியின் மக்கள் சேவை இனிதே தொடர வாழ்த்துக்கள்..
(ஐ.மு.கூன்னா ஐக்கிய முடிச்சவிக்கிகள் கூட்டணி தானுங்களே... ஒரு டவுட்டு)

..

..

Sunday, 22 May 2011

காணவில்லை!!!

பெயர்:தங்கபாலு.
வேறுபெயர்கள்:தொங்குபாலு,நொந்தபாலு,goldmilk.
தொழில்:காங்கிரஸில் குப்பை கொ(கூ)ட்டுவது.
பிடித்த வசனம்:எவனாயிருந்தாலும் நீக்குவேன்.
சாதனை:63 நாயன்மார்களை பஞ்ச பரதேசிகளாக மாற்றியது.
குறிப்பு:தமிழகத்தைப் பற்றிஎரியவைப்பதற்காக விறகுதேடி போனவர்
இது வரையிலும் திரும்பவில்லை.பார்ப்பவர்கள் அருகிலுள்ள குழந்தைகள்
காப்பகங்களில் watchman வேலைக்கு சிபாரிசு செய்யவும்.


பெயர்:மு.க.அழகிரி.
வேறு பெயர்கள்:அஞ்சா நெஞ்சன்.
தொழில்:ஆட்டோ விடுவது,நீதிமன்றபணிகளை குறைப்பது etc.
சாதனை:தமிழுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தது.(?)!!
பொழுதுபோக்கு:தேர்தல்களில் வெற்றிபெறும் தொகுதிகளை "கவர்" செய்வது.
முணுமுணுக்கும் பாடல்: "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்".
அலர்ஜி:மைக்கும் ஆங்கிலமும்.
குறிப்பு:நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து களைத்து போய் ஓய்வெடுக்க வீட்டுக்குள்
சென்றவர் கண்ணில் தென்படவில்லை.


பெயர்:ராமதாஸ்.
வேறுபெயர்கள்:தமிழ்குடிதாங்கி.
தொழில்:முன்பு மருத்துவர் இப்பொழுது அரசியல்.
பிடித்தவிளையாட்டு:நீளம் தாண்டுதல்.
அதிகபட்ச ஆசை: ஒரே ஒரு ராஜ்யசபா சீட் மூலம் மந்திரி பதவி மகனுக்கு.
குறிப்பு: தைலாபுரம் தோட்டத்திற்கு பூச்சிமருந்து வாங்க சென்றவரைக்காணவில்லை.

பெயர்:வடிவேலு.
வேறு பெயர்கள்:வைகைப்புயல்,கைப்புள்ள.
தொழில்:சினிமாவில் காமெடியன் அரசியலில் திமுகவிற்கு வில்லன்.
பிடித்த வசனம்:மாப்பு வச்சுட்டாங்கையா ஆப்பு.
சாதனை: விஜயகாந்தை எதிர்க்கட்சித்தலைவராக்க உதவியது.
குறிப்பு:தேர்தலுக்குப்பின் எந்த மூத்திரசந்தில் அடிவாங்கிக்கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.


பெயர்:கார்த்திக்.
தொழில்:சினிமாவில் ஹீரோ அரசியலில் காமெடியன்.
பொழுதுபோக்கு:அரசியல்.
குறிப்பு:சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தான் அறிவித்த தொகுதிகளைத்தேடி சென்றவர் இதுவரை
திரும்பவில்லை.பார்ப்பவர்கள் தேர்தல் முடிந்துவிட்டது என்ற விபரம் தெரிவிக்கவும்.

டிஸ்கி:ரொம்ப லேட் பதிவுன்னு பாக்காதீங்க..அம்மா வந்த அதிர்ச்சியில EBகாரனுக்கு கண்ணுமண்ணு தெரியாமா
ஓவரா கரண்ட் புடுங்கியதால நாலு நாளைக்கு அப்புறமா இந்த பதிவு. இப்போதான் கொஞ்சம் ஒழுங்காயிருக்கிறமாதிரி...
போச்சுடா இனி எப்ப வரும்னு தெரியலையே?

..

..

உங்களைப்போய் வஞ்சித்தார்களே கலைஞரே!!

உங்களைப்போய் வஞ்சித்தார்களே கலைஞரே!!

கனிமொழியின் கைதைத்தொடர்ந்து தமிழீனத்தலைவர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.அய்யகோ தமிழ் நாட்டுக்கு வந்த பெரும் துயர்தான் எத்தகையது?!1

"என் மீதும் என் குடும்பத்தினர்மீதும் வஞ்சம் தீர்க்கும்படலம் நடந்துமுடிந்துள்ளது."

தங்களின் உத்தமகுணம் யாருக்கும் தெரியவில்லை கலைஞரே!கழகமே குடும்பம் என்றிருந்தோரை புறம்தள்ளி குடும்பமே கழகம் என்ற உன்னத நிலைக்கு  
கொண்டுவரஎத்தனை இடர்களை சந்தித்தீர்?ராஜபாட்டையில் இடரும் முட்களை வாள் கொண்டு வெட்டாமல் புத்தி கொண்டு மழுங்கடித்த அரிய செயல்கள் யாருக்குத்தெரியும்?நாவலர்,எம்.ஜி.ஆர்,வைகோ என்று உங்களை வஞ்சித்தவர் எத்தனை பேர்!!!!

"நான் உயிரினும் மேலாகக்கருதும் கழகம் பெரும்தோல்விகண்டு ஆட்சியை இழந்திருக்கும் காலகட்டம் இது"

முட்டாள் ஜனங்கள் நீங்கள் உயிரென மதித்த குடும்பத்தின் அதிகாரமையங்களின் அலப்பறைகளே காரணம் என்கின்றனர்!!!!

"தமிழ் நாட்டுக்கென்று தனி ஜபர்தஸ்துகளை ஜன நாயகவிரோதசெயல்களை சாட்டைகளாகக்கொண்டு சர்வாதிகாரப்பாட்டை போட்டுக்கொண்ட தேர்தல் ஆணையம்என்னும் பிரம்மராக்ஷசம்"

மக்களுக்கு செய்த மகத்தான சேவைகளை சாதனைகளை விளக்க பணத்தாளில் அச்சடித்த விளக்கவுரையினைப் பட்டுவாடா செய்யவிடாமல் தடுத்த அக்கிரமத்தை என்னவென்று சொல்வது!!!!

"அப்பா சொன்னதைக்கேட்டதுதான் கனிமொழி செய்த குற்றம்"

தமிழகத்தை இரண்டாகப்பிரித்து தலைநகரில் கோலோச்ச ஒரு அண்ணனையும் தென்மண்டலத்தை ஆள ஒரு அண்ணனையும் அமர்த்தி டெல்லியில் அதிகாரம்செய்யவைக்க கவிதை சாலைகளில் திரிந்துக்கொண்டிருந்தவருக்கு பதவிபோதை ஊட்ட அப்பா சொல்தட்டாமல் தங்களின் சரியானஅரசியல்வாரிசாக வரித்துக்கொண்டது ஒரு குற்றமா!!!!

"சுயபுராணமாக இருந்தாலும் சுயமரியாதைபுதினமாகக்கொண்டு ஆயிரமாயிரம் இளைஞர்கள் இறுதிப்போரில் களம் காணவேண்டும்"

இதைவிட இளைஞர்களுக்கு வேறு என்ன வேலை தலைவரே?தாகம் தீர்க்க டாஸ்மாக்கும் இலவசமாக தொலைக்காட்சியும் கொடுத்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியஉங்களுக்காக இல்லையென்றாலும் தமிழர்மானம் காக்க சிறை சென்ற மறத்தமிழச்சிக்காக நிச்சயம் அவர்கள் தீக்குளிக்கவாவது செய்யவில்லையென்றால் என்னாவது!!!


"நாம் வாழும் இடத்தை வாழ்ந்த இடத்தை இருவண்ணகொடி பறந்த இடத்தை தர்ப்பைப்புல் முளைக்கும் இடமாக மாற்ற குமரிமுதல் இமயம்வரை தவமிருக்கின்றனர்"

அரசியல் என்பது சுடுகாட்டில் நடைபெறும் கூத்து என்று நீங்கள் அறியாததா தலைவரே!வேண்டுமானால் தா.கி,அருணா,ரமேஷ்,சாதிக்பாட்சா போன்றோரைக்கேளுங்களேன்.இல்லை ஈழத்தின் உயிர்களிடம் கேட்டுப்பாருங்களேன்.

உங்கள் அறப்போராட்டத்திற்கு என்றுமே  "பின்னாலிருந்து"ஆதரவு உண்டு தலைவரே!!!

..

..

Wednesday, 18 May 2011

ஆசைப்பட்டு வாங்கிய "LAUGHINGBUDHA"..இது நடந்து ரொம்ப நாளிருக்கும்..

ஷாப்பிங் போனப்போ Laughingbudha உருவமொன்றை வாங்கிவந்து டி.வி.மேல வச்சிருந்தோம்

ஃப்ரெண்ட் ஒருத்தன் வீட்டுக்கு வந்தான்..

நாமதான் 10ரூபா கிலுப்பையை வாங்குனாலும்  இது நல்லாருக்கான்னு கேட்டு பெருமைக்கு எருமை மேய்க்கிறவங்களாச்சே

சும்மா இருக்காம Laughing budha வை காமிச்சு புதுசு நல்லாயிருக்கான்னு கேட்டேன்

அவன் என்னமோ வாஸ்து வஸ்தாது மாதிரி ஒரு கெத்தா லுக் விட்டுக்கிட்டே
"யார் கிஃப்ட் குடுத்தா"

நான்:டேய் நான் காசு போட்டு வாங்குனது..

அவன்: தப்பு பண்ணிட்டியே கிச்சா எங்கிட்ட ஒரு ஐடியா கேட்டிருக்கலாமே..

(ஆமா இவரு ஐன்ஸ்டீன்பக்கத்துவீட்டுக்காரர் )

நான்:டேய் என்னடா ஆச்சு நல்லாதானே இருக்கு

அவன்:நல்லாதான் இருக்கு ஆனா ...

(டேய் பில்டப்பு போதும் மேட்டருக்கு வாடா)

என் ஒய்ஃப்:என்னண்ணா ஏமாந்துட்டாரா..நான் அப்பவே சொன்னேன் விலை விசாரிச்சு வாங்குங்கன்னு

(எப்ப கவுக்கலாம்னே பாத்துக்கிட்டு இருக்காளே)


நான்:சொல்லித்தொலைடா சீக்கிரமா

அவன்:இது வீட்டிலிருக்குறவங்களுக்கு ஆகாதுடா

நான்:யார் வீட்ல இருக்குறவங்களுக்கு?

அவன்:உங்களுக்குதாண்டா

நான்:அதில்லெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லடா..

அவன்:நான் சொல்றது சொல்லிட்டேன் அப்புறம் இன்னொன்னுகூட சொன்னாங்கப்பா
இதனால மாமன் மச்சினனுக்கும் பிரச்சினை வருமாம்..


நான்:டேய் நான் தான் எனக்கு அதில நம்பிக்கையில்லன்னு சொன்னேன்ல

என் ஒய்ஃப்:ஏங்க அவருதான் இவ்ளோ தூரம் சொல்றாருல்ல எங்க அம்மா வீட்ல இருக்குறவங்களுக்கு ஆகாதுன்னு
உங்களுக்கு நம்பிக்கையில்ல தும்பிக்கையில்லன்னுக்கிட்டு..
ஒண்ணு நான் இருக்கணும் இல்ல இந்த பொம்மை இருக்கணூம்... முடிவு பண்ணிக்குங்க நீங்களே

(வேலியில போன ஓணானை காதுக்குள்ளா விட்டா இப்படித்தான்..வீட்ல இருக்குறவங்களுக்கு ஆகாதுன்னு சொன்னப்ப
சும்மாயிருந்தவ அவங்க அப்பா அண்ணனுங்களுக்கு ஆகாதுன்னு பயபுள்ள சொல்றதகேட்டு இந்த ஆட்டம் ஆட்றாளே)

வந்த வேலய முடிச்ச ஃப்ரெண்டு கையில் Laughingbudhaவோட கிளம்பினான்

எனக்கு அதுகூட கடுப்பில்ல mylord

ஏன்டா உங்க வீட்ல பிரச்சினை வராதான்னு கேட்டதுக்கு

 "இந்த sentimentலாம் கிஃப்டா வர்றதுக்கு இல்லடாமச்சி"ன்னு பதில் சொன்னதக்கேட்டு வயிறெரிஞ்சதுதான் மிச்சம்..


யாராவது வாஸ்து ஸ்பெஷலிஸ்ட் சொல்லுங்களேன் இப்படி ஏதாவது இருக்கா??????
நல்லா கிளப்பறாங்கயா பீதிய


..

..Monday, 9 May 2011

அட்சயதிரிதியை ஸ்பெஷல்..அட்சயதிரிதியைக்கு முதல் நாள்..

ஒய்ஃப்:என்னங்க நாளைக்கு அட்சயதிரிதியை

நான்:தெரியுமே அதுக்கென்ன இப்போ?

ஒய்ஃப்:என்னங்க இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க..
 டிவில எத்தனை விளம்பரம் வருது எவ்ளோ நல்ல நாள்..

(அவனுங்க பிச்சக்காரனுக்கு ஒருதினம்னுகூட கொண்டாடுவானுங்க விளம்பரம் கிடைச்சா போதுமே)

ஒய்ஃப்:அன்னைக்கு தங்கம் வாங்குனா செல்வம் பெருகுமாங்க..

(ஆமா கடைக்காரனுக்கு வருமானம் பெருகும் நமக்கு செலவு பெருகும்)

ஒய்ஃப்:நாமளும் வாங்கலாங்க..

நான்:அது வந்து...

ஒய்ஃப்:உங்களுக்கு என் மேல பாசமே இல்ல..

நான்: இல்லம்மா வந்து ..இதுக்கெல்லாம் அழுதுக்கிட்டு..

ஒய்ஃப்:நாளைக்கு கடைக்கு போறோம்.நகை வாங்கறோம்.

(கசாப்புக்கடையில ஆடுக்கிட்ட பர்மிஷன் வாங்கியா வெட்றான்..ம்ஹூம்)

எல்லாம் முடிஞ்சு இரவு டிவி பாத்துக்கிட்டு இருந்தோம்..

அப்ப ஒரு விளம்பரம்..

"அண்ணா என்றால் பரிசுத்தமான அன்பு.அதனால் நான் அட்சயதிரிதிக்கு எங்கண்ணனுக்கு platinumதான் கிஃப்ட் செய்வேன்"

ஒய்ஃப்: என்னங்க...

அடேஏஏய்ய்ய்ய்

..

..
          Thursday, 5 May 2011

பெண்கள் ஓய்வறையில் நானும் நண்பனும்..
நான் காலேஜ் படிக்கும்போது நடந்தது இந்த சம்பவம்.

எங்க காலேஜ்  co-ed என்றாலும் ஆண்களும் பெண்களும்
பேசுவதோ பழகுவதோ ரொம்ப கஷ்டமானது..ஏன்னா
எங்க காலேஜ் ரொம்ப ஸ்ட்ரிக்டு ஸ்ட்ரிக்டு ஸ்ட்ரிக்டு

(வயசான பெருசுங்க தொல்லை ஓவர் கடுப்பு..
ஆனா அவங்க விட்ற ஜொள் இருக்கே..நற நற)

இருந்தாலும் ரணகளத்துலயும் கிளுகிளுப்பு தேடுற வயசாச்சே..


அன்னைக்கு என் வகுப்புத்தோழிரம்யாவின் பிறந்த நாள்.
என் ஃப்ரெண்ட் வேற டிபார்ட்மெண்ட்
லன்ச் ப்ரேக்ல என் ஃப்ரெண்ட் அவள விஷ் பண்ணனும்னு அடம்பிடிச்சதால
girlsrestroomku 2பேரும் போய்ட்டோம்..

(mission girlsroomனு பேர் வைக்கிற அளவுக்கு ரொம்ப ரிஸ்க் ஜாஸ்த்தி)

அங்க என் ஃப்ரெண்ட் ரம்யாவிடம் ட்ரீட் கேட்டு நச்சரிச்சிட்டு இருந்தான்.
ரம்யாவும் அப்போதைக்கு அவன சமாதானப்படுத்த ஒரு ஸ்வீட்பாக்ஸ் கொடுத்தா.

(பக்கி..2ரூவா மிட்டாய்க்கு என்னா ரிஸ்க் எடுக்குது பாரு)

வாங்குனவன் சும்மா இருக்காம ரம்யாவோட மத்த ஃப்ரெண்ட்ஸ்கிட்ட
கடல போட ஆரம்பிச்சுட்டான்..எனக்கும் ஆசை இருந்தாலும் ஸ்டாஃப்
யாராவது  வந்துடுவாங்களோன்னு பாத்துக்கிட்டே இருந்தேன்.

(அடேய் பிட்டடிச்சோ கட்டடிச்சோ மாட்னா பரவால்ல சைட்டடிச்சு மாட்டவச்சுடாதே)

சரியா அந்த நேரம் பாத்து பிரின்ஸி rounds வர நம்மாளு மாட்டிக்கிட்டான்.
அவனால ரம்யாவும் மாட்டிக்கிட்டா..

அப்புறமென்ன 2பேரயும்  வெளுத்து  தொங்கவிட்டதோட நிக்காம parents
வந்து விளக்கம் சொல்லனும்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க..
(ஸ்கூல்ல விட  மோசம் யுவர் ஆனர்)

அதுக்குபிறகு 2பேரும் கையில கால்ல விழுந்து re-admission ஆனது தனிக்கதை..

ரம்யாவை எல்லோரும் ஸ்வீட்பாக்ஸ் ரம்யான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க..


அந்த சம்பவத்திற்குபிறகு அவன் எங்கிட்ட பேசவே இல்ல..டிஸ்கி:க்ளாஸ் ஆரம்பித்ததற்கான bellsound கேட்டு நான் மட்டும்
            எஸ்ஸானது என் தப்பா மக்களே..

..

..

Tuesday, 3 May 2011

மன்மோகன் பரபரப்பு அறிக்கை:behind the scene... " ஊழலை ஒழிப்போம்..சி.பி.ஐ. அச்சமின்றி செயல்படவேண்டும்."
இந்த பரபரப்பான அறிக்கையை வெளியிட்டு இந்தியாவையே ஸ்தம்பிக்கவைத்தார் நம்ம பிரதமர்.

இவருக்குள்ளயும் என்னவோ இருக்கு போலன்னு எல்லாரும் ஆடிப்போய்ட்டாங்க..

அதுக்கு அடுத்த நாள்..

  மன்மோகன்சிங் அன்னை சோனியாவின் வீட்டில்..

சோனியா:mr.சிங்..அந்தளவு தைரியம் யாரு கொடுத்தாங்க உங்களுக்கு.. ஊழலை ஒழிப்போம்னு கோஷம் போட்டீங்களாமே?
                   காங்கிரஸை அத்தனை சீக்கிரம் ஒழிச்சிடலாம்னு பாக்குறீங்களா
சிங்: (ராகுலும் எவ்வளவோ முயற்சிக்கிறாரு இப்போதுதான் பீஹார்,உ.பி.,தமிழ் நாடு,,வரிசையா ஆரம்பிச்சிருக்கு)
       இல்ல ஜீ ஏதோ புத்திகெட்டு பேசிட்டேன்..பேட்டா ல கை வச்சிராதீங்க
சோனியா:பயப்படக்கூடாதுன்னு வேற சொன்னீங்க்ளாமே
சிங்:(பயத்துல என்ன பேசறேன்னு தெரியாம ஒரு flow ல வந்திருச்சு..என்னமோ மைக்க பாத்தவுடனே பொய்யா வருது)
       நீங்க பயப்படாத மாதிரியே நடிக்க சொன்னீங்களே..அதான் ஜீ
சோனியா:சரி சரி இதுவே கடைசியா இருக்கட்டும்..யார் எந்த கேள்வி கேட்டாலும் அந்த சீட்டுல என்ன எழுதியிருக்கோ
                  அதை மட்டும் படிங்க போதும்
சிங்:(ஏற்கனவே அதைத்தானே செய்றேன் ஒய்ஃப் கிட்ட பேசனும்னாலும் சீட்ட பாத்துதான் பேசவேண்டியிருக்கு)
      ok ஜீ

  4 நாள் கழித்து மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல்..

மாணவர்:உங்கள் மனைவி நன்றாக சமைப்பார்களாமே?
சிங்: எனக்கு எதுவும் தெரியாது..என் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை.
மாணவர்:உங்களுக்கு என்ன வயதாகிறது?
சிங்: அதை மேலிடம் முடிவு செய்யும்.

..

..

Monday, 2 May 2011

தல போல வருமா!!!!!!!
தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, ஒற்றுமையின்மை மற்றும் கோஷ்டிப் பூசல் என எனது எண்ணத்துக்கு மாறுபட்டு ரசிகர் மன்றத்தினர் நடந்து கொள்வதால், எனது பிறந்த நாளான மே 1-ம் தேதி முதல் ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன், இது எனது முடிவான அறிவிப்பு, என நடிகர் அஜீத் அதிரடியாக அறிவித்தார்.

(நமது உளவுதுறை அறிக்கைபடி இருக்கும் 50பேருக்கும் படியளந்து மாளவில்லை என்பதால் இந்த முடிவு என்று தெரிகிறது.)

"எனது நீண்ட திரைப் பயணத்துக்கு உதவிய ரசிகர்கள், பொதுமக்கள், ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த பொதுமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

(ரொம்ப நீஈஈஈஈஈஈஈஈண்ட பயணம்தான்.50படம்கிறதே சாதனைதான்).

என் படங்களை விமர்சிக்கும் உரிமை ரசிகர்களுக்கும் உண்டு.

(விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது தல உங்கள் நடிப்பு(?))


கோஷ்டிப் பூசல், ஒற்றுமையின்மை, தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, தன்னிச்சையாக இயங்குவது, சொந்த அரசியல் லாபங்களுக்காக நற்பணி இயக்கத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் நடப்பது போன்றவை என் எண்ண ஓட்டத்துக்கு உகந்தவை அல்ல.

(என்ன செய்றது தல காங்கிரஸ் மாதிரி நாங்களும் இருக்கோம்னு தெரியனும்ல.)நலத்திட்டங்கள் செய்ய இயக்கம் எதுவும் தேவையில்லை. நல்ல உள்ளமும் எண்ணமும் இருந்தாலே போதும்.

(ஆமாம் தல நீங்க நடிக்கிறேன்னு படுத்தறதை நிறுத்தப்போறீங்களா.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பா நன்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்றி.)

..

..