Sunday 22 May 2011

காணவில்லை!!!

பெயர்:தங்கபாலு.
வேறுபெயர்கள்:தொங்குபாலு,நொந்தபாலு,goldmilk.
தொழில்:காங்கிரஸில் குப்பை கொ(கூ)ட்டுவது.
பிடித்த வசனம்:எவனாயிருந்தாலும் நீக்குவேன்.
சாதனை:63 நாயன்மார்களை பஞ்ச பரதேசிகளாக மாற்றியது.
குறிப்பு:தமிழகத்தைப் பற்றிஎரியவைப்பதற்காக விறகுதேடி போனவர்
இது வரையிலும் திரும்பவில்லை.பார்ப்பவர்கள் அருகிலுள்ள குழந்தைகள்
காப்பகங்களில் watchman வேலைக்கு சிபாரிசு செய்யவும்.


பெயர்:மு.க.அழகிரி.
வேறு பெயர்கள்:அஞ்சா நெஞ்சன்.
தொழில்:ஆட்டோ விடுவது,நீதிமன்றபணிகளை குறைப்பது etc.
சாதனை:தமிழுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தது.(?)!!
பொழுதுபோக்கு:தேர்தல்களில் வெற்றிபெறும் தொகுதிகளை "கவர்" செய்வது.
முணுமுணுக்கும் பாடல்: "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்".
அலர்ஜி:மைக்கும் ஆங்கிலமும்.
குறிப்பு:நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து களைத்து போய் ஓய்வெடுக்க வீட்டுக்குள்
சென்றவர் கண்ணில் தென்படவில்லை.


பெயர்:ராமதாஸ்.
வேறுபெயர்கள்:தமிழ்குடிதாங்கி.
தொழில்:முன்பு மருத்துவர் இப்பொழுது அரசியல்.
பிடித்தவிளையாட்டு:நீளம் தாண்டுதல்.
அதிகபட்ச ஆசை: ஒரே ஒரு ராஜ்யசபா சீட் மூலம் மந்திரி பதவி மகனுக்கு.
குறிப்பு: தைலாபுரம் தோட்டத்திற்கு பூச்சிமருந்து வாங்க சென்றவரைக்காணவில்லை.

பெயர்:வடிவேலு.
வேறு பெயர்கள்:வைகைப்புயல்,கைப்புள்ள.
தொழில்:சினிமாவில் காமெடியன் அரசியலில் திமுகவிற்கு வில்லன்.
பிடித்த வசனம்:மாப்பு வச்சுட்டாங்கையா ஆப்பு.
சாதனை: விஜயகாந்தை எதிர்க்கட்சித்தலைவராக்க உதவியது.
குறிப்பு:தேர்தலுக்குப்பின் எந்த மூத்திரசந்தில் அடிவாங்கிக்கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.


பெயர்:கார்த்திக்.
தொழில்:சினிமாவில் ஹீரோ அரசியலில் காமெடியன்.
பொழுதுபோக்கு:அரசியல்.
குறிப்பு:சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தான் அறிவித்த தொகுதிகளைத்தேடி சென்றவர் இதுவரை
திரும்பவில்லை.பார்ப்பவர்கள் தேர்தல் முடிந்துவிட்டது என்ற விபரம் தெரிவிக்கவும்.

டிஸ்கி:ரொம்ப லேட் பதிவுன்னு பாக்காதீங்க..அம்மா வந்த அதிர்ச்சியில EBகாரனுக்கு கண்ணுமண்ணு தெரியாமா
ஓவரா கரண்ட் புடுங்கியதால நாலு நாளைக்கு அப்புறமா இந்த பதிவு. இப்போதான் கொஞ்சம் ஒழுங்காயிருக்கிறமாதிரி...
போச்சுடா இனி எப்ப வரும்னு தெரியலையே?

..

..

3 comments:

  1. இவங்கள கண்டுபிடிச்சி கொடுத்தா என்ன பரிசு என்பதையும் தெரிவித்திருக்கலாம் ....

    ReplyDelete
  2. //இவங்கள கண்டுபிடிச்சி கொடுத்தா என்ன பரிசு என்பதையும் தெரிவித்திருக்கலாம் ....//

    கண்டுபிடிப்பவர்களுக்கு கலைஞரின் காவியப்படைப்புகளின் தொகுப்பும் உளியின் ஓசை,இளைஞன்,பொன்னர் சங்கர் போன்ற படங்களின் dvd இலவசமாக வழங்கப்படும்

    ReplyDelete