Thursday, 19 July 2012

நியதிகள் !!

நியதிகளைக்கட்டிக்கொண்டு அழும் உலகம் இது!

காலக்கிரமத்தின் வார்ப்பெடுப்பில் உள்ளீடுகளைத்தொலைத்து சக்கையாய் போய்விடுவன நியதிகள்!ஆனாலும் அதையும் விடாமல் பல ஜீவன்கள் பற்றிக்கொண்டுதான் வாழ்கின்றன.அப்பற்றே வாழ்தலின் முகாந்திரமாய் அமைந்துவிடுகிறது அவர்களுக்கு!அத்தகைய ஒரு ஜீவன் "ஆதாமின்ட மகன் அபு"


வாழ்நாளின் ஒரே நோக்கமாய் அவர் இதயத்தை துளைத்து வீற்றிருப்பது ஹஜ் யாத்திரை..குதிரைக்கேற்ற கடிவாளமாய் அவர் மனைவி ஆயிசும்மா.. சர்க்கரை இல்லாத கடுங்காப்பியின் கசப்பு நாக்கில் நிற்பதுபோல் நிராதவராய் விட்டுசென்ற மகன் மீதான இயலாக்கோபம் மனதில் கசப்பூற நிலைத்து நிற்கிறது..

ஹஜ் யாத்திரை தன் முதலும் இறுதியுமான யாத்திரையாகவே பாவிக்கிறார்..
அதற்காகப் பசியையும் வயதையும் எதிர்த்து நடத்துகிறார் வாழ்க்கை...

பழைய படங்களின் பாதிப்போ என்னவோ இந்த யாத்திரை நிமித்தம் அபு சந்திக்கும் பலரில் யாரேனும் ஒருவர் அவரை ஏமாற்றிவிடுவார் என்றெண்ணி ஏமாந்தேன்..

கோட்பாடுகளில் ஊறி நேர்படவே ஊர்ந்துக்கொண்டிருக்கும் அபுவுக்கு அவ்வப்போது யதார்த்த நிலையினை எடுத்துகூறும் சகோதரனாக டீக்கடை ஹைதர்..

இழப்போ பிரிவோ ஏதோ ஒன்று அன்பு என்னும் இழையை மேலும் பத்திரப்படுத்தி உறவுகளை வலுக்கச்செய்கிறது ..

அவ்வகையில் அபு தன் யாத்திரைக்கு முன் பிணக்குகள் தோன்றிய ஓர் உறவுக்கு அன்பு பூச்சு பூசுகிறார்.

மனிதர்கள் ஏமாற்றவில்லை ஆனால் யாத்திரைக்காக அவர் விற்ற பலாமரம் அவரை ஏமாற்றிவிடுகிறது..

உதவிகள் நீண்டாலும் நீர்த்துப்போகாமல் பிடித்து வைத்திருக்கும் நியதிகளை இழப்பதில்லை அபு..

மீண்டும் கனவு மீண்டும் பசி மீண்டும் ஒரு நம்பிக்கை என மறுபடியும் துவங்குகிறது அபுவின் வாழ்தல்..

...
...
...
...
...
...
...
அட இன்னும் நிறைவு பெறவில்லை மக்களே
 என்முந்தைய பதிவுக்கு அமோக ஆதரவளித்த அன்புள்ளங்களுக்கு நன்றிகள் உரித்தாகுக ...
..
..

2 comments:

 1. மச்சி.. தொடர்ந்து மலையாள படத்துக்கு விமர்சனம்
  எழுதிட்டு இருந்தின்னா.. உன் ப்ளாக்கை
  " மலையாள பட விமர்சனம் ப்ளாக்னு "
  முத்திரை குத்திடுவாங்க.. அதனால நடு நடுவுல
  ஹிந்தி, தெலுங்கு, இங்கிலீஸ் பட விமர்சனமும்
  போடு..

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி இது சும்மா மச்சி பிளாக் கடையை இழுத்து மூடலாம்னுதான் நினைச்சேன் ..சமுகக்கடமை தவறக்கூடாதுங்குறதுக்காகத்தான் இதெல்லாம்.. நாங்கள்ளாம் பல மொழி வித்தகர்கள் இல்லையா ..(எதை வித்தேன்னு கேட்டுடாத)
   பாப்போம் எது வரைக்கும் போகுதுன்னு

   Delete