பசி இல்லையென்றால் என்னவாகும்
இப்படி ஒரு சிந்தனை ஓடியது எனக்கு
பசி நம் உடலின் சர்வாதிகாரி
பசி அது எதை வேண்டுகிறதோ அதை
அடையாமல் ஓய்வதில்லை
நாம் ஓடும் ஓட்டம் ஆடும் ஆட்டம்
அத்தனையும் நிர்ணயிப்பது பசி
பசி என்னும் உணர்வு இல்லாவிடில்
உடற்பசி முதல் அதிகாரப்பசி வரை
எதுவும் இருக்காது என நினைக்கிறேன்
பசி இல்லாத உலகு வெகு சீக்கிரம்
அழிவுக்கு செல்லக்கூடும்
போராட்டங்கள் இல்லாத வாழ்வு நிலைக்குமா என்ன
எண்ணிப்பாருங்கள்
காடுகளில் வேட்டையில்லை
சிறுமானும் சில்வண்டும் சிறுத்தையும்
எண்ணிக்கை பெருகி காங்கிரீட் காடுகளுக்கு
படையெடுக்கும் காட்சியை
வயிற்றுப்பசி இல்லாத மனிதன் எத்தனை
இலக்கியம் படைப்பான் அப்படி படைக்கும்
இலக்கியத்தில் சுவைதான் இருக்குமா என்ன
பசி இல்லாவிடில் கடவுளுக்கும் வேலை இருக்காது
சமரசம் பொங்கும் வாழ்வு கிடைக்கிறதோ தெரியாது
சுவாரசியம் இல்லா வாழ்வுதான் எஞ்சும்
ஏனோ என் வரையில் தோன்றிய எண்ணங்களை
சொல்லிவிட்டேன்
இறுதியாக “உணவை வீண் செய்யாதீர்கள்”
இப்படி ஒரு சிந்தனை ஓடியது எனக்கு
பசி நம் உடலின் சர்வாதிகாரி
பசி அது எதை வேண்டுகிறதோ அதை
அடையாமல் ஓய்வதில்லை
நாம் ஓடும் ஓட்டம் ஆடும் ஆட்டம்
அத்தனையும் நிர்ணயிப்பது பசி
பசி என்னும் உணர்வு இல்லாவிடில்
உடற்பசி முதல் அதிகாரப்பசி வரை
எதுவும் இருக்காது என நினைக்கிறேன்
பசி இல்லாத உலகு வெகு சீக்கிரம்
அழிவுக்கு செல்லக்கூடும்
போராட்டங்கள் இல்லாத வாழ்வு நிலைக்குமா என்ன
எண்ணிப்பாருங்கள்
காடுகளில் வேட்டையில்லை
சிறுமானும் சில்வண்டும் சிறுத்தையும்
எண்ணிக்கை பெருகி காங்கிரீட் காடுகளுக்கு
படையெடுக்கும் காட்சியை
வயிற்றுப்பசி இல்லாத மனிதன் எத்தனை
இலக்கியம் படைப்பான் அப்படி படைக்கும்
இலக்கியத்தில் சுவைதான் இருக்குமா என்ன
பசி இல்லாவிடில் கடவுளுக்கும் வேலை இருக்காது
சமரசம் பொங்கும் வாழ்வு கிடைக்கிறதோ தெரியாது
சுவாரசியம் இல்லா வாழ்வுதான் எஞ்சும்
ஏனோ என் வரையில் தோன்றிய எண்ணங்களை
சொல்லிவிட்டேன்
இறுதியாக “உணவை வீண் செய்யாதீர்கள்”