Monday 31 October 2011

சொகுசுப்பயணம்

போன வாரம் மிக அவசரவேலையாக
திருவனந்தபுரம் செல்லவேண்டிய கட்டாயம்.
தீபாவளி சமயம் ரயில் புக்கிங் தத்கால்லில் கூட
கிடைக்கவில்லை.என்னடா செய்யலாம் என்று
யோசித்தபோது அந்த பிராபல *** பஸ் சர்வீஸ்
 இருப்பது நினைவுக்கு வந்தது.


முதலில் ஆன்லைனில் பதிவுசெய்யலாம் என்று
முயற்சி செய்தால் கடைசி வரிசையைத்தவிர
அனைத்து இருக்கைகளும் நிறைந்துவிட்டதாக
காண்பித்தது.பரவாயில்லை என்று முன்பதிவு செய்ய
துவங்கும்போதுதான் என் நண்பன் வந்தான்.

"டேய் எதுக்கும் ஃபோன்லயோ நேர்லயோ
கேட்டுப்பாரு"என்றான்.

சரி எதுக்கும் ஃபோன்ல கேட்போம்.
"ஹலோ *** ட்ராவல்ஸ்"
"சார் இன்னைக்கு நைட் திருவனந்தபுரத்துக்கு
டிக்கட் கிடைக்குமா?"
"வாங்கிக்கலாம் வாங்க..பத்துமணிக்கு
வண்டி அரைமணி நேரம் முன்னாடி
ரிபோர்ட் செய்யனும்..கரக்ட் டைமுக்கு
வண்டி கிளம்பிடும்"

இரவு9.30மணிக்குச்சென்று டிக்கட் வாங்கிக்கொண்டேன்.
விலை ரூ.800 என்றாலும் பரவாயில்லை ஏசியில் சொகுசாப்
போகலாம் என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்.

இரவு10.30 மணி;
"சார் வண்டி எத்தனை மணிக்கு கிளம்பும்"
"வந்துரும் சார் "
"எங்கிருந்து வரனும்"
"பெங்களூரிலிருந்து வந்துக்கிட்டு இருக்கு"
இரவு 11.00
"சார் வண்டிஇன்னும் வரலையே "

"வந்துருங்க"

ஒரு வழியா இரவு11.20க்கு வந்தது "சொகுசு"பஸ்.
பேருந்தில் என்னையும் சேர்த்தே 10 பேர் மட்டுமே.

ஏசிக்கு அடக்கமா ஒரு போர்வை குடுத்தாங்க.பரவாயில்லயே.

வண்டி கிளம்பும்போது எலே நில்லுவே என்று கத்தியவாறு
ஒரு கனத்த்த்த்த்த்த ஆளும் அவருக்கு அல்லக்கை போன்ற
ஒருவரும் ஏறினர்.


இருக்கை எண் தேடியவாறு வந்த "பிரபு" என் பக்கத்து
இருக்கையில் வந்தமர்ந்தார்.அவர் அமர்ந்த வேகத்தில்
நான் ஒரு ஓரமாக ஒண்டினேன்.

அந்த இரவு நேரத்திலும் பவுடர்கமகமக்க வந்திருந்தார்.

சரி நாம் தூங்குவோம் என்று ஓரமாக ஒண்டியவாறே
தூங்க ஆரம்பித்தேன்.

அரைமணிநேரம் கழிந்து காது பக்கத்தில் கிரைண்டர்
சத்தமும் பிரஷர்குக்கர் சத்தமும் மாறி மாறி கேட்க
ஆரம்பித்தது. பிரபு அண்ணன் தான்!!

கிரைண்டர் ஓயும்வரை தூக்கம் வருவேனா என்றது.

அப்பாடி ஒருவழியாக கிரைண்டர் ஓய்ந்தது.


சரி தூங்கலா...................

பிரபு அண்ணன் இப்போது தூக்ககலக்கத்தில்
சிறிதுசிறிதாக என்புறம் சாய்வதும் எழுவதுமாக
ஆட்டத்தை ஆரம்பித்தார்.

அவர் இருக்கிற உடம்புக்கு என்னால் அவரைப்
பிடித்து தள்ளவும் முடியவில்லை.முடிந்தவரை
ஓரம் ஒண்டி கைகளைப்பாதுகாப்பு அரணாக்கினேன்.

ஒரு வழியா அண்ணன் ஸ்டெடி ஆனாரு.

 தூங்கிட்றா கைப்புள்ள


தூங்கி எழுந்து பார்த்தா காலியாயிருந்த வண்டி பாதி
நிரம்பி இருந்தது.எல்லாம் லோக்கல் ஆளுங்க தான்.

வண்டி ஊருக்கு ஊர் நின்னு டிக்கட்
ஏத்திக்கிட்டுப் போனது.(டிரைவர் பாக்கெட்டுக்குதான் கலக்ஷன்)

காலையில்10மணிக்கு சேர வேண்டிய வண்டி மதியம் 12.45க்கு
போய் சேர்ந்தது.

இப்படியா ஒருசொகுசுப்பயணம் நிறைவுக்கு வந்தது.

அவ்ளோ அவசரமா புறப்பட்டு
அன்றைக்குப்பூராவும் எரிச்சலா திரிஞ்சதுதான் மிச்சம்.